| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170923b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a வைணவ சமய ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a சுவரோவியம் |
| 500 | : | _ _ |a திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் தாமிரபரணி ஆற்றிற்கும் கடனா நதிக்கும் இடையே அமைந்துள்ள ஊர் மன்னார் கோயில். இங்குள்ள இராஜகோபால சுவாமி கோயில் மிகப்பழமையான ஒன்றாகும். பாண்டிய மண்டலத்தில் சோழர்களால் எழுப்பப்பட்ட கோயில். இதற்கு சான்றாக 38 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் சோழர், சோழ-பாண்டியர், பாண்டியர் கல்வெட்டுகள் மற்றும் களக்காட்டுத் திருவடி, குறுநில மன்னர் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவையாகும் மேலும் முதலாம் இராசேந்திர சோழன், சடாவர்மன் சுந்தரசோழபாண்டியன், சடாவர்மன் குலசேகர பாண்டியன்(1190-1217) மற்றும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்குள்ளது சிறப்பாகும். இராசேந்திரசோழன் ஆளுமைக்கு உட்பட்ட இப்பகுதியில் அவரது ஆணைக்கிணங்க சேர மன்னன் இராசசிம்மனால் இக்கோயில் கட்டப்பட்டது என்று இங்குள்ள இராசேந்திர சோழனின் 24வது ஆட்சியாண்டு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இக்கோயில் அஷ்டாங்க விமானம் என்ற கட்டுமான அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சேர மன்னன் குலசேகர ஆழ்வார் இக்கோயிலில் 30 ஆண்டுகள் தங்கி இங்குள்ள இறைவனை வழிபட்டு வந்துள்ளார். இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. இறைவன் நின்ற நிலை, கிடந்த நிலை மற்றும் அமர்ந்த நிலையில் உள்ளார். முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் உள்ள முன் மண்டபம் மற்றும் கருவறைச் சுவர்ப் பகுதிகள், மரத்தூண்கள் போன்றவற்றில் வைணவம் தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக கண்ணனின் பல்வேறு அவதாரங்களையும், இராமர் பட்டாபிஷேகம், ரிசிகள், வாயிற்காவலர்கள் மற்றும் அலங்கார வரைவுகள் போன்றவை வண்ணங்களுடன் தீட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களில் மஞ்சள் வண்ணம் அதிக அளவிலும், அதைத் தொடர்ந்து சிவப்பு, கருநீலம், வெள்ளை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வண்ணம் நிறைவு செய்யப்பட்ட உருவங்களை கறுப்பு வண்ண கோடுகளால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் விஜயநகர-நாயக்கர் பாணியையும், கேரள ஓவியப் பாணியையும் உள்வாங்கி அவைகளுக்கு நிகரான புதிய பாணியை உருவாக்கியுள்ளனர். இராமர் பட்டாபிகம் மற்றும் அவதார உருவங்களை வரையும் போது ஆகம விதிகளுக்கு உட்பட்டு அளவுகளும், வடிவங்களும் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதே நேரம் மரத்தூண்களில் வரையப்பட்ட கண்ணன் மற்றும் பிற ஓவியங்கள் நாட்டுப்புற கலை வடிவங்களை ஒத்த தன்மையில் கையாளப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a
|
| 653 | : | _ _ |a சுவரோவியம், மன்னார்கோயில், திருநெல்வேலி, விஜயநகர நாயக்கர், பாண்டியர், வைணவம், கண்ணன் |
| 700 | : | _ _ |a க.த. காந்திராஜன் |
| 710 | : | _ _ |a க.த. காந்திராஜன் |
| 752 | : | _ _ |a இராசகோபாலசாமி கோயில் |b # |c மன்னார்கோயில் |d திருநெல்வேலி |f அம்பாசமுத்திரம் |
| 850 | : | _ _ |a க.த. காந்திராஜன் |
| 914 | : | _ _ |a 8.7325 |
| 915 | : | _ _ |a 77.4214 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00046 |
| barcode | : | TVA_PNT_00046 |
| book category | : | சுவரோவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |